செவ்வாய், 23 செப்டம்பர், 2014

தலைமுறை பல கடந்த மாட்டுவண்டி பயணம் 
மேற்க்கத்தேயர்கள் கூட வியந்து போற்றும் எங்கள் பாரம்பரியம் இண்று எம்மவர் பலரால் கைவிடப்பட்டு மேலைத்தேய மோகத்தில் உழல்கிண்ற இண்றைய சூழலில் ஆங்காங்கே எமது பண்பாடு பாரம்பரியம் பேணப்படுகிண்றமை சற்று ஆறுதலே.அந்த வகையில் கிளிநொச்சி மாவடட்டத்தின் பல இடங்களில் இண்றும் பல பாரம்பரிய விடையங்களை பேணுகிறார்கள். அவ்வாறு தொண்று தொட்டு தமது பாரம்பரிய முறைப்படி பண்டம் எடுக்கப்படும் முறையை பேணி வருகிறார்கள் புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தில்.


பங்குனி உத்தரத்தில் தம்பிரானுக்கு பொங்கல் விழா எடுக்கிறார்கள்.அந்த நிகள்வுக்காக புளியம்பொக்கணையில் இருந்து மீசாலை புத்துர் சந்தி வரை பல கிலோமீட்டர் துரம் பயணிக்கிறார்கள் மாட்டு வண்டியில் இந்த மாட்டுவண்டி பயணமானது தலைமுறைகள் பல தாண்டியும் தொடர்கிறது. பொங்கல் விழா நிகள்வுகள் ஆரம்பமாகும் நாளண்று இவர்களுடைய மாட்டு வண்டி பயணம் ஆரம்பமாகிறது. 
மாட்டு வண்டியில் தங்களுககு தேவையான பொருட்களுடன் மாடுகளுக்கு தேவையான வைக்கோல் போண்ற வற்றுடன் புளியம் பொக்கணையில் இருந்து புறப்படடு ஏ முப்பத்தைந்து வீதியை அடைந்து அங்கிருந்து பரந்தன் சந்தியை அடைந்து அங்கிருந்து ஏ ஒன்பது வீதியுடாக அனையிறவு முகமாலை போண்ற இடங்களினுடாக பயணித்து மீசாலை புத்துர் சந்தியை அடைகிறார்கள். 
அங்கே அமைந்திருக்கிண்ற நாகதம்பிரான் ஆயத்தில் பூசைகள் இடம்பெறுகிண்றன. அத்துடன் மீசாலை சாவகச்சேரி போண்ற ஊர்களில் தண்டல் இடம்பெறுகிண்றதுடன் இத்தண்டலின் போது மக்கள் கோழி இழநீர் அரிசி பொங்கலுக்கு தேவையான பொருட்கள் எனபவற்றை வழங்குவதோடு மதிய நேரங்களி அன்னதானமும் இடம்பெறுகிண்றது.
இவ்வாறு அங்கே தங்கி இருக்கும். இவர்கள் பொங்கல் தினத்திற்கு முதன்நாள் மீசாலையில் இருந்து புறப்பட்டு ஏ ஒன்பது வீதியூடே பயணித்து பரந்தனை அடைந்து அங்கிருந்து ஏ முப்பத்தைந்து வீதியுடாக கண்டா வளையை அடைந்து அங்கிருந்து ஆலயத்தை நோக்கி பயணிக்கிண்றனர். வரும் வழிகளில் அடியார்களினால் அன்னதானம் வழங்கப்படுகிண்றமையும் குறிப்பிடத்தக்கது.


இவ்வாறானதொரு மாட்டு வண்டி பயணத்தின்போது ஆலயம் நோக்கி பண்டத்துக்குரிய பொருட்களோடு வந்துகொண்டிருந்த போது ஆனையிறவில் வைத்து ஒல்லாந்தர்கள் வழிமறித்ததாகவும் வழிமறித்து இவர்களை சோதனை இட்டதாகவும் இவர்களை கேலிசெய்ததாகவும் தமது மதத்திற்கு மாறும்படி கூறியதாகவும் இல்லையெனில் கொண்று விடுவோம் எண்று மிரட்டியதாகவும் அந்த சந்தர்ப்பத்தில் பூசகர் நாகதம்பிரானை வளிபட்டு வேட்டி ஒண்றை முறுக்கி பொங்கல் பானையில் இட்டதாகவும் உடனே ஜந்துதலை நாகபாம்பு தொண்றியதாகவும் உடனே வழிமறித்த ஒல்லாந்தர்கள்

பொங்கல் தினத்தண்று மாலை மாட்டுவண்டிகள் ஆலயத்தை வந்தடைகிண்றன. மக்களால் வழங்கப்பட்ட நேர்த்திப்போருட்கள் பொங்கலுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் பண்டம் எடுக்கும் இடத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அங்குவைத்து பண்டம் எடுக்கும் நிகள்வு இடம்பெறும்.
பொங்கல் விழா நிகழ்வை காண்பதற்கு வன்னி பெருநிலப்பரப்பின் பல பகுதிகளில் இருந்தும் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் புலம் பெயர் நாடுகளில் இருந்தும் பல லடச்சக்கணக்கான மக்கள் வருகிண்நனர். இப்பெரும் பொங்கலண்று தருசிக்க வருகிண்ற பக்த அடியார்களுக்கு நாகதம்பிரான் அவர்களது கண்களுக்கு புலப்பட்டு காட்சி கொடுக்கும் அறப்புதமும் இடம்பெற்று வருகிண்றது. இப்பொங்கல் விழாவானது ஏறக்குறைய ஜநுறு ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெற்று வருவதாக ஆலய தல புராண நுலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாலயத்தில் ஆகமம் சார்ந்த கிரியைகள் இடம் பெறுவதுடன் ஆகமம் சாராத கிரியைகளும் இடம்பெற்ற வருகிண்றது. இவ்வாலயத்தில் அரசமரப்பொந்திலுள்ள பரம்பரை நாகபாம்புகளுக்கு நீதிநாயக முதலியாரின் பரம்பரையிலிருந்து வந்த ஆண்வழி உரித்துடையோர் பூசகர்களாக இருந்து வருகிண்றனர் என்றும் தர்மகத்தா சபையினர் தெரிவித்தன்ரர்.
இவ்வாறு அருள்மிகு நாகதம்பிரான் ஆலயத்தில் ஆகமம் சாராத வளிபாடுகளும் பண்டம் எடுக்கும் நிகள்வுகளும் தனித்துவமாக இடம்பெற்று வருகிண்றன.வன்னி பெருநிலப்பரப்பில் கிராமிய வழிபாட்டில் முக்கியம் பெற்ற ஆலயமாக அருள்மிக கரையச்சி புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலயம் விளங்குகிண்றது.
                                                                                                                                                                                                                                                                                            சு.முரளீதரன்
                                                                                                                       


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக